காட்சி எண் 6
Nandhini
House / Day / Ext / Int
கல கலப்புடன் ஒரு
திருமண வீடு..
உறவினர்கள், நண்பர்கள்,
அலங்காரங்கள் என்று
அனைத்தையும் கடந்து கொலுசு
போட்ட கால்கள் ஓடி வருதல்...
பின்னால் திரும்பி ஓடி வந்ததில்
ஒருவர் மேல் இடித்து திரும்ப
நந்தினியின் அறிமுகம் -
தாவணியில் (அலைபாயுதே )
Mix
மணப்பெண்ணின் தங்கை
நந்தினி.... விவேக்கை டீஸ்
செய்ய வேண்டுமென்று
தோழிகளோடு
திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள்...
நந்தினி : ஏய் சந்தனம் ரெடி, சொதப்பாம
கர்ச்சீப் காட்டுவியா
தோழி : ம் ரெடி ரெடி
Mix
சிவா காரை விட்டு இறங்குதல்....
நந்தினியின் தோழிகள் இருக்கும்
இடத்தில் ஒருவன் வந்து
ஒருவன் : ஏய் மலர் இங்கே என்ன
பண்ணிட்டிருக்க
கர்ச்சீப்பை ஆட்டிய படியே
மலர் : ஹாய், என் பிரெண்டோட
அக்கா மேரேஜ் அதான்
வந்தோம்..
Panning
தோழி கர்ச்சீப் ஆட்டுவதை
பார்த்த நந்தினி
திட்டமிட்டபடி மாப்பிள்ளையின்
மேல் ஊற்ற வேண்டிய
சந்தனத்தை சிவா மேல்
ஊற்றி விடுகிறாள்.
சிவா அதிர்ந்து போய் நிற்கிறான்...
நந்தினி அசடு வழிந்து
நந்தினி : ஐம் ஸாரி.. வெரி வெரி
ஸாரி...
சிவா சமாதானமாகிப்
புன்னகைத்தல்...
சிவா : இட்'ஸ் ஓ.கே
சந்தனத்தைத் துடைத்து
விடுகிறேன் என்று
கரி பூசப்பட்ட கர்ச்சீப்பால்
முகம் துடைத்து விடுதல்...
பின் அதற்கும் வழிதல்...
வெட்கப்பட்டு ஓடும்போது
அவளின் துப்பட்டா எதிலோ
மாட்டிக் கிழிய...
கூச்சத்துடன் நந்தினி மார்புகளின் குறுக்கே
கைகளை வைத்துக் கொள்கிறாள்..
சிவா அவளின் துப்பட்டாவை
எடுத்துக் கொடுத்தல்....
இருவரின் ஆழமான பார்வைகள்
சிவாவிடமிருந்து துப்பட்டாவைப் பறித்துக்கொண்டு
ஒரு சிரிப்புடன் நந்தினி ஓடுதல்..
ஸ்லோ மோஷன்..
பாடலின் ஹம்மிங் இங்கே ஆரம்பமாகிறது..
சிவா அவளையே பார்த்துக் கொண்டிருக்கிறான்..
நந்தினி ஓடிய பிறகு
விவேக் வருகிறான்...
சிவாவைப் பார்த்து
விவேக் : ஹா ஹா மாட்டிக்கிட்டியா
என்று சிரிக்கிறான்.
நிறைய டயலாக் விடுகிறான்.
கடைசியில் அவன் மேலும்
ஒரு வாளி சந்தனம் வந்து விழுகிறது.
விவேக் ரியாக்ஷன்
----- Cut to -----