Saturday, December 3, 2016

உயிர்மெய் - காட்சி எண் - 7

காட்சி எண் - 7
Nandhini House / Day / Int

சிவாவும், விவேக்கும் கோட்
இல்லாமல் இருக்கிறார்கள்

இப்போது சிவாவிற்குத் தன்
வருங்கால மனைவியை
அறிமுகப்படுத்துகிறான் விவேக்...

இருவரும் வணக்கம்
சொல்லி கொள்கிறார்கள்

சிவா விவேக் தேவதர்ஷினி
மூவரும் பேசிக் கொண்டு
இருக்கிறார்கள்

அப்போது தோழிகளுடன்
அவர்களுக்குக் கூல் டிரிங்க்ஸ்
கொண்டு வருகிறாள் நந்தினி...

சேலையில் ஒரு தேவதை
போல இருக்கிறாள்...

அவளையே வைத்த கண்
வாங்காமல் பார்க்கிறான் சிவா....

நந்தினியும் சிவாவைப்
பார்த்து வியக்கிறாள்...

சிவாவிற்கு நந்தினியை
அறிமுகப்படுத்துகிறான் விவேக்....

விவேக் :    சிவா இவதான் என்னோட ஒரே மச்சினி....
ஒரு ஹாய் மட்டும் சொல்லிக்க

                                        சிவா :        ஹாய்

என்கிறான்

நந்தினி வெட்கத்துடன்
புன்னகைக்கிறாள்

விவேக் நந்தினியைப் பார்த்து

விவேக் :    இவன் என் பிரெண்ட் சிவா...
நீ ஒரு ஹலோ சொல்லிக்க

என்கிறான்....

நந்தினி :     ஹலோ..

என்று சொல்லி வெட்கப்பட

விவேக் :    ஏய் நீ அதிகமா ரியக்ஷன்
காட்டுற..... கிளம்பு  கிளம்பு...

நந்தினி :     ஆமாம் உங்க பிரெண்டை
சைட் அடிக்கவா வந்தேன்......
ரொம்ப டென்ஷனா இருப்பீங்கன்னு கூல் டிரிங்ஸ் கொண்டுவந்தேன் எடுத்துக்குங்க...

அனைவரும் கூல் டிரிங்ஸ்
எடுக்கிறார்கள்...

அதிலும் நந்தினி ஸ்டிராவை
முடிந்து வைத்திருக்கிறாள்...
மாப்பிள்ளையை மாட்டி விட....

தவறுதலாக சிவா அதனை
எடுத்து விடுகிறான்...

அவள் சைகைகள் செய்கிறாள்....

அவளின் சைகைகளை அவன்
வினோதமாகப் பார்த்து
ரசிக்கிறான்...

ஆனால் புரிந்து கொள்ளவில்லை....

ஸ்டிராவை வைத்து இழுக்க
கூல் டிரிங்க் வராமல்
அவன் முழிப்பது

ஸ்டிராவை வெளியே எடுக்க
அது முடிந்திருக்கிறது...

விவேக் அதைப் பார்த்து
சத்தமாக சிரிக்கிறான்....

விவேக் :    இப்பவும் நீ மாட்டிக்கிட்டியா

என்று ஒரு தத்துவம் கூறுதல் ...

சொல்லி முடிக்கும் போது
பக்கத்து டேபிளில்....

நந்தினி கூல் டிரிங் தட்டி விட்டு ...
மொத்தமாக விவேக் மேல் விழுதல்...

அனைவரும் சிரிக்கிறார்கள்...

விவேக் ரியாக்ஷன் ....

விவேக் :    ம், மாப்பிள்ளையா புரமோஷன்
கொடுத்தாலும் காமெடியன்
காமெடியன் தானாடா டேய்

என்று புலம்பியபடி
நந்தினியைப் பார்க்க.....

நந்தினி :     ஐயோ மாமா நான் இல்லை.....

என்று கூறியபடி
மாடிக்கு ஓடுதல்.....

சிவா அவளையே பார்த்துக்
கொண்டிருக்கிறான்...

மாடி வரை ஓடியவள்
அங்கிருந்து ஒரே முறை
சிவாவைத் திரும்பிப் பார்க்கிறாள்.....

இருவரையும் விவேக்
பார்த்து விடுகிறான்.

மீண்டும் புலம்பல்

விவேக் :    எனக்கிருந்ததே ஒண்ணே
ஒண்ணு கண்ணே
கண்ணுன்னு
ஒரு மச்சினி.....அவளையும்
கரெக்ட் பண்ணிட்டானா?.....
டேய் பாவிகளா?






----- Cut to -----

No comments:

Post a Comment