Thursday, December 8, 2016

உயிர் மெய் - காட்சி எண் - 8, 8A

காட்சி எண் - 8
College Ground / Early Morning / Ext


பேஸ்கட் பால் கிரவுண்டில்
கார்த்திக் தன் தோழர்களோடு
விளையாடிக் கொண்டிருக்கிறான்.

கார்த்திக் :   ரவி எங்கடா?

நண்பன் :    இல்ல கார்த்திக் சொன்னா நீ
கோவிச்சுக்குவ
சடார் என அவனை முறைத்து

                                      கார்த்திக் :     எங்கடா அவன்?

நண்பன் :    மப்புபடிச்சி மண்டக் காஞ்சிப்
போய் கிடக்கிறான்....

கார்த்திக் :   என்னடா சொல்ற...

நண்பன்-2 : அதான்டா செல்வின்னு ஒரு பிகர் பின்னாடி சுத்திட்டு இருந்தான். சாக்லேட், ஐஸ் க்ரீம், பூவுன்னு அவளுக்கு வாங்கிக் கொடுத்தான் அவ இவனுக்கு மொத்தமா அல்வா குடுத்துட்டா..

நண்பன்-3 : அப்படி எல்லா இல்லடா  அவ
ஓகே தான் அவங்க அப்பா,
அம்மா ஒத்துக்கல....

கார்த்திக் :   இப்ப எங்க இருக்கான்....


------Swiss Pan-----


காட்சி எண் – 8A
College Ground / Morning / Ext


கார்த்திக்கின் வகுப்புத் தோழி ஷிவானி
தன் தோழிகளுடன்
பேசிக் கொண்டிருக்கிறாள்.

கார்த்திக் தன் தோழர்களுடன்
வருகிறான்...

ஷிவானியின் தோழிகளில்
ஒருத்தியைப் பெயர் சொல்லி
அழைக்கிறான்...

கார்த்திக் :   ஏய் இங்க செல்வி யாருடி...

ஷிவானி :   கார்த்திக் மைண்ட் யுவர்
பிஸ்னஸ்....

கார்த்திக் :   சேம் டூ யூ... செல்வி யாரு....

அவள் பயந்தபடி வர.....

கையை நீட்டி நண்பனிடமிருந்த
கடிதத்தை வாங்கி கிழித்து
அவள் முகத்தில் எறிகிறான்....

அனைவரும் அதிர...

கார்த்திக் :   காதலுக்காக எதை
வேண்டுமானாலும் விட்டுத் தரலாம் காதலையே விட்டுத் தரக்கூடாது....
அப்பா-அம்மா மிரட்டலுக்காக
இன்னைக்கு வேண்டாம்னு சொல்றவ காதலிக்கிறப்ப யோசிச்சியா
நீ மாட்டேன்னு சொன்னா உன் லைஃப்பும் ஸ்பாயிலாயிரும், இவன் லைஃப்பும் ஸ்பாயிலாயிரும்...
உன் கூட வாழ்க்கை நடத்த ஒரு 10,000 பத்தாதா. அதை இவன் சம்பாதிக்க மாட்டானா....

செல்வி ரியாக்ஷன்......

ஷிவானி ரியாக்ஷன்....

கார்த்திக் :   பின்ன... இங்கே பார் உங்க
காதலுக்காக யார் எதிர்த்து நின்றாலும் இந்த காலேஜ் முழுக்க உங்களுக்கு சப்போட் பண்ணும்.

செல்வி தயங்குதல்.....

ஷிவானி :   அவளுக்குப் பிடிக்கலேன்னா
விட்டுற வேண்டியதுதான

என்று கூற....

கார்த்திக் இருவரையும் பார்த்து

கார்த்திக் :   பிடிக்கலையா.... என்ன பிடிக்கலையா

என்று கேட்க....

காதலன் காதலி அங்கேயே
இணைகிறார்கள்.....
ஷிவானியைக் கேலியாகப்
பார்த்தவாறே வெற்றிப்
புன்னகையுடன் திரும்புகிறான்
கார்த்திக்....

கார்த்திக் :   யாருக்காகவும் எதுக்காகவும் காதலை மட்டும் விட்டுக்கொடுக்கக் கூடாது"

என்று கார்த்திக் கூற...

ஷிவானி அவனையே
முறைக்கிறாள்.

ஷிவானியையே பார்த்துக்கொண்டு
வந்த கார்த்திக் எதிரே வந்த
ப்ரியா மேல் மோதுகிறான்

புத்தகங்கள் சிதறுகின்றன

கார்த்திக் ப்ரியா
இருவரின் பார்வைகள்





 ---- Cut to -----

No comments:

Post a Comment