காட்சி எண் 5
Road / Night / Ext - [ Fight No - 1 ]
இரு கோஷ்டிக்கும்
பலத்த சண்டை நடக்கிறது.
இறுதியில் ரெளடிகள் விலகி ஓடுகிறார்கள்..
காதல் ஜோடி கார்த்திக்கை
கையெடுத்துக் கும்பிடுகிறது…
அவர்களை பார்த்துக்
கார்த்திக் : மேரேஜ் ஆயிருச்சா…
அவர்கள் இல்லை எனத்
தலையாட்டுகிறார்கள்..
கார்த்திக் நண்பர்களை பார்க்க..
நண்பர்கள் : ஓகே..டா ஜாமாய்ச்சரலாம்..
காதல் ஜோடியைப் பார்த்து
பாஸ் கவலையே படாதீங்க..
நம்ம ஃப்ரெண்ட்ஸ் வீட்லயே தங்கிக்கலாம்….
அங்க வந்து எல்லாத்தையும்
டீடெய்லா சொல்லுங்க.. ஓகே.
என்பது..
அவர்கள் நன்றியுடன் பார்ப்பது..
அனைவரும் ஒவ்வொருவரின்
பைக்கில் ஏற..
ப்ரியா தனியாக நிற்கிறாள்..
கார்த்திக்… அவளிடம்..
கார்த்திக் : ம்.. ஏறிக்கோ..
ப்ரியா அவனையே பார்க்க..
கார்த்திக் அவளிடம் ஏறுமாறு
சைகையில் கூற..
தயக்கமாய் அவள் பைக்கில் ஏறுதல்..
கார்த்திக் : ஆமா அவங்கதான் மேரேஜ் பண்ணிக்கப் போறாங்க..
அதனால ஓடிவந்தாங்க.. நீ ஏன் ஓடிவந்த..
ப்ரியா : அவ என் ஃப்ரண்டு..
அதனால தான்..
என்று அப்பாவியாய் கூறுதல்
கார்த்திக் பைக்கினை நிறுத்துதல்..
அவளைப் பார்த்துச் சிரித்தல்..
மீண்டும் பைக் செல்ல ஆரம்பித்தல்..
கார்த்திக் : நீ யாரையாவது லவ் பண்றியா..
ப்ரியா : ம்.. இல்ல… ஏன் கேட்கிறீங்க..
கார்த்திக் சிரித்துக்கொண்டே
கார்த்திக் : இல்ல காதலிச்சா என்னைக்கு
ஓடி வரப்போறீங்கன்னு தெரிஞ்சுக்கலாம்னுதான்..
ப்ரியா சிரித்தல்..
----- Cut to -----
No comments:
Post a Comment