Tuesday, November 29, 2016

உயிர்மெய் - காட்சி 2, 3, 3A, 3B,

காட்சி எண் - 2
Airport / Day / Ext / Silent Portion


ஒரு விமானம் வந்து
இறங்குகிறது..

Master Shot – Trolly in
லவுன்ஞ்சில் - சிவாவின் அம்மா,
அப்பா, அண்ணா, அண்ணி,
அனைவரும் நிற்கிறார்கள்.

அனைவரும் படிகளில்
இறங்கி வருதல்

குடும்பத்தினர் ஆவலுடன்
சிவாவை எதிர்பார்த்தல்

அண்ணி அண்ணனிடம்
அண்ணி : என்னங்க இந்த ஃப்ளைட்னு தானே சொன்னான்

அம்மா அப்பாவிடம்
அம்மா : என்னங்க இன்னைக்கு தானே வரேன்னு சொன்னான்

அப்பா அம்மாவை முறைத்தல்

அண்ணி, அண்ணனிடம்
அண்ணி : எதுக்கும் அவனுக்கு போன் பண்ணிப் பாருங்க...
என்று கூறுதல்

சிவா பின்னாலிருந்து 'ஆ' என்று அலறி பயமுறுத்துதல்,

அம்மாவும் அண்ணியும்
சேர்ந்து அலறுதல்..

சிவாவைப் பார்த்தவுடன்
அடிக்கத் துரத்துதல்

சிவா ஓடுதல்..

அப்பாவும் அண்ணாவும் சிரித்தல்...

----- Mix to -----
==================================================

காட்சி எண் - 3
Shiva House / Day / Ext / Silent Portion


Crane Shot
சிவா வீடு எஸ்டாபிளிஷ்மென்ட்

Crane Down
ஒரு Rangerover கார் உள்ளே வருகிறது

சிவாவை ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்கள்


----- Cut to -----

=====================================


காட்சி எண்- 3 A
Shiva House / Day / Int 


டைனிங் ஹால்

அப்பா, அம்மா, அண்ணா,
அண்ணி, பாட்டி, சிவா
அனைவரும் இருக்கிறார்கள்.

அம்மாவும், அண்ணியும் நின்றபடி
பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள்

சிவா உணவை ருசித்தபடி

சிவா : அம்மா சூப்பர்மா இப்டி ருசியா சாப்ட்டு எவ்ளோ நாளாச்சு..

அம்மா : ஏய் எல்லாம் உங்க அண்ணி சமையல் டா..
என்னால எங்க முடியுது..

சிவா : அண்ணிக்கு டிரெய்னிங் கொடுத்திட்டு நீங்க
விஆரெஸ் வாங்கிட்டீங்களா...
அண்ணி... ம்ம்ம் கலக்குறீங்க...
அதான் அண்ணன் ஒரு அஞ்சு
கிலோ ஏறுன மாதிரி தெரியரானா?...

அண்ணன் தன்னையே
பார்த்துக்கொண்டு...

அண்ணன் : அப்டியா தெரியறேன்.. அது சரி
நீ ஏன்டா இளைச்சுட்ட...

சிவா : இளைச்சுட்டனா.. கஷ்டப்பட்டு
எக்ஸர்சைஸ் பண்ணி பாடிய
மெயின்டெயின் பண்றேண்ணா..

பாட்டியைப் பார்த்து

என்ன பாட்டி சத்தத்தையே காணோம்

அப்பா பாட்டியைப் பார்த்து
ஜாடை காட்டுகிறார்

பாட்டி இரு இரு என்பது
போல் சைகைக் காட்டுதல்

பாட்டி : ஏம்பா வெள்ளையா ஒரு கோட்டுப் போட்டுட்டு
டாக்டர்னு சொல்லி ஊரை ஏமாத்திட்டு அலைறானே உன் ப்ரண்டு
அவன் கல்யாணத்துக்கா வந்த?

சிவா :   ஆமா பாட்டி.

பாட்டி : அப்ப எங்களப் பார்க்க வரல.

சிவா : அய்யோ அப்படி இல்ல பாட்டி.
பயங்கர பிஸியா வேலை நடந்திட்டிருக்கு.

பாட்டி :   நாங்க இருக்கமா- இல்லையான்னு
பார்க்கறதுக்கு கூட வர முடியாதபடி
வருஷம் முழுக்க அப்படி என்னதான் வேலையோ.
சரி வயசாகிட்டே போகுதுல்ல
ஒரு கல்யாணத்த பண்ணிக்கிட்டா நல்லாருக்கும்ல.

சிவா : ஓ தாராளமா பண்ணிக்கலாம் பாட்டி...
இப்பல்லாம் பாட்டிகளுக்கு பயங்கர டிமாண்ட் தெரியுமா...
சொல்லு எந்தக் கன்ட்ரி மாப்பிள்ளை உனக்கு வேணும்னு...
வெள்ளையா வேணுமா இல்ல நல்ல கருகருன்னு
கண்ணுக்கு லட்சணமா பாத்திரலாமா...
தாத்தா போனதுக்கப்புறம் இவ்ளோ வருஷம் கழிச்சு இப்பவாவது ஒரு மறுகல்யாணம் பண்ணனும்னு உனக்குத் தோணிச்சே...
யூ ஆர் ரியலி கிரேட் பாட்டி...

அனைவரும் முறைத்தல்

பாட்டி : ஆமா எனக்குத் தான் இப்போ அவசரம் பாரு...
தனியா இருந்து கஷ்டப்படறியே..
நாங்கதான் கூட இல்ல.. கல்யாணம் பண்ணிகிட்டாலாவது..
அந்தப் பொண்ணாவது உன்ன பக்கத்துல இருந்து
பார்த்துக்குவா இல்லையா

அண்ணண் : அட நீ ஒண்ணு பாட்டி.
அமெரிக்காவோட கல்ச்சரே வேற,
அவனுக்கு எத்தனை குழுந்தைன்னு கேளு

சிவா : அடப் போண்ணா இருக்க வேலைக்கு
அதப்பத்தியெல்லாம் நினைக்க நேரமே இல்ல.
கைல 3 ப்ராஜக்ட் இருக்கு
ஒவ்வொண்ணுக்கும் 2 வருஷம் வெச்சிட்டாக் கூட
6 வருஷத்துக்கு மூச்சு விடமுடியாது.

அம்மா : உன் பிரெண்ட் மேரேஜ் பார்க்க நீ வந்திருக்க,
உன்னோட மேரேஜ் பார்க்க
எங்களுக்கெல்லாம் ஆசை இருக்காதடா

சிவா : தயவு செய்து என்னை  ம்ப்பல் பண்ணாதீங்கம்மா
I am not interested now 

அண்ணி : இல்ல சிவா அவங்க எதுக்கு சொல்றாங்கன்னா

என்று அண்ணி சொல்ல
அண்ணண்  ஒரு பார்வை பார்க்க
அண்ணி அமைதியாகுதல்

அப்பா :   சரி இப்ப வேணாம்னா
அப்புறம் எப்பத்தான் பண்ணிக்கப் போற

சிவா : ஐயோ என்னப்பா இது
கல்யாணம் ஒண்ணுதான் வாழ்க்கையா...
ஒய்ஃப் வந்தா அவளுக்கு
புடவை, நகை, ஷாப்பிங்-ன்னு அலையணும்.
அப்புறம் குழந்த வரும்,
அதுக்கு பவுடர்டின், பால்புட்டின்னு..
I Don't have time for all these things. 
இப்ப பண்ணிட்டிருக்க வேலை 
என்னோட ட்ரீம் ப்ராஜக்ட் 
என்னை நம்பி எவ்ளோ பெரிய 
பொறுப்பைக் கொடுத்திருக்காங்கன்னு உங்களுக்கே தெரியும்  
I Love my Job. Just leave me.  
கல்யாணம் அது இதுன்னு குழப்பாதிங்க
I am happy now.  
என்று எழுந்து சென்று
வாஷ்பேஷனில் கை கழுவுகிறான்.

அனைவரும் அவனையே பார்க்கிறார்கள்.
வாஷ்பேஷனில் தண்ணீர் விழும் காட்சி.

----- Cut to -----

====================================================


காட்சி எண் - 3 B
Shiva House / Night / Int 

அண்ணா, அண்ணி அறை

அண்ணண் உடை மாற்றிக்
கொண்டு கட்டிலில் அமருதல்

கட்டிலின் மறுபுறம்
அமர்ந்திருக்கும் அண்ணி

அண்ணி : என்னங்க, நமக்குத்தான் குழந்த இல்ல..
நம்மகிட்ட சொல்லாட்டா கூட அத்தையும், மாமாவும்
மனசுக்குள்ள எவ்வளவு தூரம்
வருத்தப்படறாங்கன்னு எனக்குத் தெரியும்..
சிவாவுக்குக் கல்யாணமாகி
பேரன் பேத்தின்னு  பார்க்கிறதுக்கு
அவங்களுக்கு ஆசை இருக்காதா..
சிவா புரியாம இன்னும் சின்னப் பையனாவே இருக்கானே.....
என்று கூறுதல்

அண்ணண் : அதுக்கு நாம என்னடி பண்ண முடியும்
அவனுக்குத்தான் கல்யாணம் பண்ணிக்கத்
தோணலன்னு சொல்றானே...
விடு ஏதாவது நடக்கும்

என்று லைட்டை ஆஃப்
செய்யக் கையை நீட்டுவது..

C.S-ல் நைட் லேம்ப் ஆஃப்
செய்யப்படுவது.

----- Cut to -----

No comments:

Post a Comment