காட்சி எண் - 1
Airport / Day
/ Ext / Silent Portionசென்னை விமான நிலையம் -
நவம்பர் 17 - 2016 என்று திரையில்
எழுத்துக்கள் வருகின்றன.
ஏர்போர்ட் அட்மாஸ்பியரை
கேமரா காட்டுகிறது.
விமானம் அமெரிக்கா
புறப்படுவதற்கான
அறிவிப்புக் கேட்கிறது.
டைட்-டிலிருந்து ஜூம் பேக்
சிவாவை வழியனுப்ப வந்த
அனைவரும் அந்த ஸ்பீக்கரைப்
பார்த்து சோகத்துடன்
சிவாவை நோக்கித்
திரும்புகிறார்கள்
சிவாவின் அம்மா கையில்
டவலில் குழந்தையை
ஏந்தியபடி நிற்கிறார்
விவேக் சிவாவிடம் ப்ளீஸ்டா
என்பது போல் கெஞ்சுகிறான்.
மீண்டும் அறிவிப்புக் கேட்கிறது.
சிவா அனைவரையும்
சோகத்துடன் ஒரு பார்வை
பார்த்துவிட்டு
குழந்தையை அம்மாவின்
கைகளிலிருந்து தூக்குகிறான்
ஸ்லோமோஷன்
வாங்கும்போது
குழந்தை அழுகிறது..
அம்மா பதறியபடி,
குழந்தையைத் தர
மனமில்லாமல் தருகிறார்..
குழந்தையை வாங்கிக் கொண்டு
சிவா நடக்க ஆரம்பிக்கிறான்.
குழந்தை அவனின்
தோளிலிருந்து அவர்களைப்
பார்த்து வீறிட்டு அழுகிறது..
சிவா இன்னும் இரண்டு
அடிகள் எடுத்து வைக்கிறான்...
Bleech - Slowmotion
திரையில் ஒரு வருடத்திற்கு
முன்பு என்று வருகிறது.
- Mix to -
No comments:
Post a Comment